பல்கலைக்கழக உணவகத்திற்கு முன் தீக்குளித்த மாணவன்!

செவ்வாய் நவம்பர் 12, 2019

22 வயது  மாணவர் ஒருவர் நிதிப் பிரச்­சினை கார­ண­மாக  தான் கல்வி கற்­று­வரும் பல்­க­லைக்­க­ழக உண­வ­கத்­துக்கு முன்­பாக   தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட விப­ரீத சம்­பவம்  பிரான்ஸில் இடம்­பெற்­றுள்­ளது.

அந்த மாணவர் லையன் பிராந்­தி­யத்­தி­லுள்ள  மேற்­படி உண­வ­கத்தின் முன் தீக்­கு­ளிப்­ப­தற்கு முன்­ன­தாக தான் எதிர்­கொண்­டுள்ள நிதிப் பிரச்­சினை குறித்து பேஸ்புக் இணை­யத்­தளப் பக்­கத்தில்  பதி­வேற்றம் செய்­துள்ளார்.

தான் தற்­கொலை செய்து கொள்­வ­தற்கு  பிரான்ஸ் ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக்ரோன், அவ­ருக்கு முன்னர் அந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக பதவி  வகித்­த­வர்­க­ளான  பிரான்­கொயிஸ் ஹொலண்ட் மற்றும் நிகொலஸ் சார்க்­கோஸி, தீவிர வல­து­சாரிக் கட்­சியின் தலைவர் மாரின் லீ பென் மற்றும் ஐரோப்­பிய ஒன்­றியத் தலை­வர்கள் ஆகி­யோரே காரணம் என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

லையன் 2 பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்கும் அந்த மாணவர் பேஸ்புக் இணை­யத்­த­ளத்தில் தன்னால் பதி­வேற்றம் செய்­யப்­பட்ட செய்­தியில், மாத­மொன்­றுக்கு 450 யூரோ பணத்தில் வசிப்­பதால் ஏற்­பட்­டுள்ள நிதிச்­சு­மையை  எதிர்­கொள்ள தன்­னிடம் இனி­மேலும்  வலிமை கிடை­யாது என அவர் தெரி­வித்­துள்ளார்.

அவ­ரது திட்டம் குறித்து  அவர் தனது காத­லிக்கு குறும்­செய்­தி­யொன்றை அனுப்பி வைத்­த­தை­ய­டுத்து  காதலி அது  தொடர்பில் காவல் துறையிடம் முறைப்­பாடு செய்­துள்ளார்.

எனினும் காவல் துறை சம்­பவ இடத்­திற்கு வரும் முன்னர் அந்த மாணவர் தீக்­கு­ளித்துள்­ள­தா­கவும் அவரது உட லில் 90 சதவீதமான  பகுதியில் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.