பல்கலைகழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம்

புதன் அக்டோபர் 20, 2021

பல்கலைகழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் பல்கலைகழக உபவேந்தர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் இரு வார காலத்திற்குள் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் பல்வேறு பல்கலைகழக மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு விட்டதால் பல்கலைகழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.