பல்கலைகழகங்களை திறக்க நடவடிக்கை

வெள்ளி ஓகஸ்ட் 14, 2020

அனைத்து பல்கலைகழகங்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி, மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பரீட்சைகளின் நிமித்தம் பல்கலைக்கழகங்களை கட்டம் கட்டமாக திறப்பதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.