பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நால்வர் கைது!!

புதன் செப்டம்பர் 15, 2021

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-யாழ்.மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ள பணிப்புரை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸார் இன்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் முகக்கவசம் அணியாத ஒருவரையும், பயணத் தடையை மீறிய ஒருவரையும், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய இருவரையும் பொலிசார் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
 
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.