பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!!

வியாழன் செப்டம்பர் 17, 2020

யாழ்ப்பாணம்,கல்வியங்காடு பகுதியில் இன்று காலை ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் கைகள் மற்றும் கால்களில்களில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விக்டர் சுந்தர் என்பவர் மீதே வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், நாயன்மார்க்கட்டு பகுதியைச் சேர்ந்த,பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் இன்று காலை கல்வியங்காடு பகுதியில் நின்ற போது,மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த மற்றொரு கும்பல்,அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பித்துள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.