பனையால் வீழ்ந்த தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு!!

வியாழன் ஏப்ரல் 08, 2021

யாழில் பனையால் வீழ்ந்த சீவல் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.கரவெட்டி மேற்கு, கௌடானை பகுதியில் இந்த துயரம் இடம்பெற்றது.சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் விஜராசா (53) என்பவரே உயிரிழந்துள்ளார்.
 
நேற்று காலை சீவல் தொழிலுக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் பனை மரத்திலிருந்து விழுந்து நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.