பஞ்சாப் மாநிலத்திலும் பரவியது பறவை காய்ச்சல்!

புதன் சனவரி 20, 2021

இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்திலிருந்து பறவைக்காய்ச்சல் ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், ஹிமாச்சல் பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பரவியது. கேரளாவில் கோழிகள் மூலமாகவும் ராஜஸ்தான் போன்ற மற்ற மாநிலங்களில் வாழ்த்துக்கள் மற்றும் காகங்கள் மூலமாகவே பரவியது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் மர்மமான முறையில் கோழிகள் இறந்தது. தகவலறிந்து வந்த சுகாதாரத்துறை, இறந்து கிடந்த கோழிகளை ஆய்வு செய்ததில் அவற்றுக்கு பறவைக்காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பஞ்சாப் தலைமைச் செயலாளர் வினி மஹாஜன் கூறியதாவது:

பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விலங்குகள் நல வாரியம் மூலம் தொற்று பரவும் அபாயமுள்ள கோழிகளை பாதுகாப்பாக அழிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அனைத்து பண்ணைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று கூறினார்.