போக்குவரத்து சேவைகள் வழமைக்கு!

திங்கள் ஏப்ரல் 15, 2019

பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்பிற்கு வருவதற்காக இன்று (15) முதல் போக்குவரத்து திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நேற்று (14) முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் வழமைக்குக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை இன்று முதல் புகையிரத சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.