போலிச் செய்திகளை நம்பவேண்டாம்!

புதன் மே 22, 2019

தனது உடல் நிலைத் தொடர்பில் வெளிவரும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாமென, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தான் நோய்வாய்ப்பட்டுள்ளதால், கனடாவுக்குச் சென்றிருப்பதாக செய்திகள் வெளியிடப்படுவதாகவும், தான் தேக ஆ​ரோக்கியத்துடன் சிறிலங்காவிலேயே  இருப்பதாகவும் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.