பொள்ளாச்சி சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது!

திங்கள் மார்ச் 11, 2019

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது என்று கனிமொழி  தெரிவித்துள்ளார். 

 பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் குறித்து கனிமொழி . தனது டுவிட்டர் பக்கத்தில் “பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது. 

இந்த கூட்டத்தையும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும், அரசும் அமைச்சர்களும் காப்பாற்ற முனையாமல், சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, உடனடியாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.