போலந்து அதிபராக ஆண்ட்ரெஸ் டுடா மீண்டும் தெரிவு

செவ்வாய் ஜூலை 14, 2020

 போலந்து நாட்டில் நடந்த தேர்தலில் அந்நாட்டு அதிபராக தற்போது அதிபராக உள்ள ஆண்ட்ரெஸ் டுடா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளரான ஆண்ட்ரெஸ் டுடா 51.21 சதவீத வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட வார்ஷா நகர மேயரான ரவால் டிராஸ்கோவ்ஸ்கியை 2 சதவீத வாக்குகள்  வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றி வாகை சூடினார்.

அதே நேரம் 49 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ள ரவால் டிராஸ்கோவ்ஸ்கி பலம் வாய்ந்த எதிர்கட்சி தலைவராக விளங்குவார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். போலந்து நாட்டில் கொரோனா பரவி வரும் வேளையில் கொரோனா அச்சத்தை தவிர்த்து ஏராளமானோர் வாக்களிக்க முன்வந்தது குறிப்பிடத்தக்கது.