போலந்து முதலீட்டாளர்கள் குழுவொன்று அடுத்த சில நாட்களில் சிறீலங்காவுக்கு விஜயம்!!

புதன் டிசம்பர் 08, 2021

இலங்கையின் பால் உற்பத்தித் திட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக போலந்து முதலீட்டாளர்கள் குழுவொன்று அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுடனான நேற்றைய சந்திப்பின்போது இலங்கைக்கான போலந்து தூதுவர் பேராசிரியர் அடம்ஸ் பரோவ்ஸ்கி இதனைத் தெரிவித்தார்.இலங்கையின் விவசாய உற்பத்திப் பொருட்களை போலந்திற்கு ஏற்றுமதி செய்தல் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான விவசாய பொருட்களை பரிமாறிக்கொள்ளல் தொடர்பிலும் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.