பொங்கல் விழாவில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்

சனி சனவரி 18, 2020

மும்பையில் தைப்பொங்கல் அன்று (15-01-2020) ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாஹ் (Steve Waugh)

அவர்களை பொங்கல் விழாவினையொட்டி தமிழர் நலப் பேரியக்க தலைவரோடு மும்பையில் சந்தித்தோம்.

s

கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஸ்டீவ் வாஹ் அவர்களுக்கு தமிழர்களுடைய பாரம்பரிய மிக்க பொங்கல் விழா குறித்து விளக்கிச் சொன்னோம். பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்தும் அதனுடைய சிறப்புகள் குறித்தும் அறிந்த ஸ்டீவ் வாஹ் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, நமது தமிழ் மக்கள் வாழும் பகுதிகளை சுற்றிப்பார்த்தார்.அங்கு கிரிக்கெட் விளையாடிய தமிழ் குழந்தைகளோடு தானும் இணைந்து விளையாடி அசத்தினார்.

s

அவருக்கு அடுத்து அடுத்து நிகழ்சிகள் இருந்த்தால் நன்றி சொல்லி விடைபெற்றார்.

s

நேற்று (16-01-2020)தமிழர் நலப் பேரியக்கம் ஒருங்கிணைத்துள்ள பொங்கல் நிகழ்வில் முடிந்தால் பங்கேற்பதாக தலைவர்  சோழன் மு.களஞ்சியம் அவர்களிடம் உறுதியளித்து சென்றார்.

s