போர் நிலவிய பகுதிகளில் ஐந்தில் ஒருவர் மனநோயாளி!

புதன் ஜூன் 12, 2019

உலகில் போர் நிலவிய பல்வேறு பகுதிகளில் ஐந்தில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்படுள்ளதாக ஐ.நா ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் மனநல மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் மார்க் வேன் ஓமர்மேன் என்பவர் போர் காலங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். 

இந்த ஆய்விற்கென மார்க், ஒரு குழுவினை உட்படுத்தினார். இந்த ஆய்வின் முடிவுகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் உதவ நலம் சேர்ப்பதாக மார்க் தெரிவித்துள்ளார். இது குறித்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
 

போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் சில மருத்துவ நெருக்கடி காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து செய்யப்பட்ட இந்த ஆய்வு அவர்களுக்கு மேலும் உதவ வேண்டும் என்கிற எண்ணத்தோடு மட்டும்தான். 

 


இப்பகுதிகளில் உள்ள மக்கள் தொகையில் 9% சாதாரணமான மன அழுத்தம் முதல் அதி தீவிர மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது உலக அளவில் போர் அல்லாத பகுதிகளில் வாழும் மனநோயாளிகளின் எண்ணிக்கையை விட மிக அதிகம். 

இந்த மன அழுத்தம் அதி தீவிரமாக ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக உள்ளது. இந்த ஆய்வு 1980 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் எடுக்கப்பட்டது. 

உலகம் முழுவதும் நடைப்பெற்ற போர், இயற்கை பேரிடர், மருத்துவ அவசர நிலை ஆகிய சமயங்களில் எடுக்கப்பட்டது. இந்த ஆய்வு 39 நாடுகளில் எடுக்கப்பட்டது. எபோலோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வு குறித்து மார்க் கூறுகையில், ‘என்னதான் மோசமான சூழல் போர் நடைபெறும் இடங்களில் இருந்தாலும், அரசியல் ரீதியான உதவிகள் கிடைத்தால் மக்களின் மன அழுத்தத்தை போக்க சர்வதேச அமைப்புகளால் சிறப்பாக இயங்க முடியும்’ என கூறியுள்ளார்.