போராட்ட நெறியின் தலைமுறைக் கடத்தலில் மாவீரர்களின் வகிபாகம் என்ன?

வெள்ளி நவம்பர் 22, 2019

இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கான போராட்டம் - உயிரினத் தொடர்ச்சியின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. காலக்கோட்டுக்கும் தமிழினத்தின் போராட்டப் பண்புகளுக்கும் நேர்கோட்டுத் தொடர்புண்டு என்பது வரலாறு. 

மொழியாலும் - மரபுகளாலும் ஆதாரப்படுத்தக்கூடிய தொன்மையை பண்புக்கூறாக கொண்ட தமிழினத்தின் உலகவரலாற்றில் போராட்டங்களின் எழுச்சியும் - வீழ்ச்சியும் புதிதானவையல்ல.

பின்வருகின்ற பிள்ளைகள் த

'மாவீரர்கள்' என்ற அடையாளங்கள், மறந்துபோக இயலாத போராட்ட இயல்பின் ஆகப்பிந்திய சமூகத்தழும்புகளாக எமக்கிடையில் தரப்பட்டு நிலைத்திருப்பவர்கள். 

இந்தத்தழும்புகள், தமிழினம் அடைந்திருக்கின்ற ஆகப்பிந்திய தோல்வியின் அகக்காரணங்களையும் - புவிச்சூழமைவின் நிலைப்பாடுகளை இவ்வினம் தரவேற்றிக்கொண்டு அடுத்தொரு நிலைத்திருப்புக்கான தேடல் தொடர்ச்சியை கையாள்வதற்குரிய அவகாசத்தையும் இக்கணம் வரையும் நினைவுறுத்திக்கொண்டிருக்கின்றார்கள். 

பூசிப்பதற்கு ஏற்றவர்களாக மாவீரர்கள் போற்றப்படுவதற்கு அவர்களது இலட்சியம் எங்ஙனம் காரணமாயுள்ளதோ - அதே போன்றே வருகின்ற தமிழினத்தின் தலைமுறைகளுக்கு போராட்டநெறியின் தேவை, இனவிடுதலைக்கான ஒரேதெரிவென்பதை வெளிப்படுத்துவதற்கும் மாவீரர் வழிபாடு காரணமாகின்றது.

தமிழினம்; மொழிவழி இனமுதன்மையை வலியுறுத்தி பலப்படுத்த தவறியமைக்கான விளைவுகளின் ஒரு பகுதியையே, ஈழத்தமிழர்கள் - சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எதிர்ப்பாகவும் அடக்குமுறைகளாகவும் எதிர்கொள்ள நேர்ந்தது. 

பின்வருகின்ற பிள்ளைகள் த

தமிழ்த்தேசிய விடுதலைக்கான போராட்டத்தின் இலக்குக்கூறுகளான 'தாயகம் - தேசியம் - தன்னாட்சி' ஆகியவை இன்னொரு இனக்குழுமத்தினதுடையதை பறிப்பதோ - இன்னொரு இனக்குழுமத்தினதுடையதை பங்கிடுவதையோ குறிப்பதல்ல. 

மாற்றாக, தமிழினம் தனக்கு உரித்துடையதான - தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதான உரிமைகளை மீட்டெடுப்பதற்காக குறிவைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை.

பின்வருகின்ற - இனத்தின் பிள்ளைகள், தமக்கு உரித்துடையதான நிலத்தையும் - இனத்தனித்துவத்தையும் - ஆட்சியதிகாரத்தையும் சுட்டிப்பாக தெரிந்துகொள்ளவும், அவற்றிற்கான இடர்களுக்கெதிராக கையுயர்த்தவும் திடம் தருகின்ற வகிபாகமே மாவீரர்களுடையது. 

பின்வருகின்ற பிள்ளைகள் த

இலட்சிய உறுதியின் திருப்பெயரால் விழுந்தவர்களால் மட்டுமே ஒவ்வொரு முறையும் விழ விழ மடங்குடைய வீரியத்தோடு எழுகின்ற தைரியத்தை, எஞ்சியவர்களிடம் தக்கவைக்க முடியும்.
அது மாவீரர்களுக்குரிய தெய்வநிலைப்படுத்தலினால் சாத்தியமாகின்றது. ஆக, மாவீரர் நினைவிலும் - அவர் நிகரற்ற நெறியின் நிழலிலும் பின்தொடர்கின்ற சந்ததிகள் இனத்தின் இருப்பை உறுதிசெய்கின்றார்கள்.

போராட்டகுணத்தின் தொடர்ச்சியை வெளிப்படுத்தவேண்டிய எதிர்காலத் தேவைப்பாடுகளின் போதெல்லாம் - இறைநிலைக்கு உயர்ந்த வரிச்சீருடையணிந்த எல்லைச்சாமிகள், நிமிர்ந்து நடக்கின்ற மக்கள் அணிவகுப்பின் முன்வரிசையில் நிழலாக நடக்கின்றார்கள்.

மாவீரர்களை வணங்குவோம்!!

(ஆதவன் குணா முகப்புத்கம் - நவம்பர் 21, 2019)