போரின் தாக்கத்திலிருந்து யாழ்ப்பாண மக்கள் இன்னும் மீளவில்லை!

திங்கள் ஏப்ரல் 15, 2019

போர் நிறைவுற்று பல வருடங்கள் கடந்த போதும் அதில் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் ஆகியவற்றிலிருந்து யாழ்ப்பாண மக்கள் இன்னும் மீளவில்லையென அம்மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

 தனியார் பத்திரிக்கையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே தர்ஷன ஹெட்டியாராச்சி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,“எமக்கும் குடும்பம் என்றதொன்று உள்ளமையால்தான், அம்மக்களின் துயரங்களை உணர்ந்துகொள்ள முடிகின்றது.   அரசியல்வாதிகள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.