போர்ப்பயிற்சி ஆசான்” மேஜர் செல்வராசா மாஸ்ரர் வீரவணக்க நாள்!

செவ்வாய் ஓகஸ்ட் 27, 2019

இப்பிடித்தான் 1990களில் சண்டைகள் இல்லாத நேரங்களில் அண்ணை தளபதி மாரை தான் நிக்கிற இடத்துக்கு கூப்பிட்டு ஏதாவது போட்டி நடக்கும். பெரும்பாலும் அது துப்பாக்கி சூட்டுப்போட்டியா தான் இருக்கும்.

ஒருநாள் ரெண்டு கையிலை, ரெண்டு துவக்கு தூக்கிர போட்டி ஒண்டை வைச்சார். உது ஈஸி தானே? எண்டு “ரம்போ” கணக்கா யோசிக்கக்கூடாது.

அவர் வச்ச போட்டி என்னண்டா.ரெண்டு துவக்கை முன் நுனி பெரலில பிடிச்சு தூக்கி, நீட்டி வச்சிருக்கோணும்.! போட்டி SMG இல தொடங்கி,AK, SLR, எண்டு போய், கடைசியில இந்தியன்ற பிறண் LMG இல வந்து நிண்டிச்சுது.

போட்டியில எல்லாரும் தோத்து போக, ரெண்டு பிரண் LMG ஐ தூக்கி செல்வராஜா மாஸ்ட்டர் முதலாம் இடம் பிடிச்சார்.அவருக்கு 30- 9mm ரவுண்ஸ் பரிசா அண்ணையிட்டை இருந்து கிடைச்சுது.

மாஸ்டர் அடிக்கடி பெடியளுக்கு உடம்பை இறுக்கோணும்! உடல் பயிற்சி செய்யுங்கோ எண்டு கத்திரத்தின்ற அர்த்தம் அண்டைக்கு விளங்கிச்சுது. எங்கட ஊர் “ரம்போ” எங்கட மாஸ்ட்டர் தானே.

பெடியள் ஏதாவது குழப்படி செய்தால் அண்ணை சொல்லுற வசனம், “செல்வராஜாட்டை ட்ரெயினிங் எடுத்திருந்த உந்தப்பிழை வந்திருக்காது” எண்டுவார். இதுவே மாஸ்ட்டரின் தகுதிக்கான விருது.

செல்வராசா மாஸ்ரர் இன் போராட்ட காலப்பகுதியின் முக்கிய நினைவில் இதுவுமொன்று அந்த காலப்பகுதியில் அதாவது இந்திய இராணுவ ஆதிக்கத்தில் மட்டுவிலில் தலைவரின் மனைவியும் பிள்ளைகளும்.

ஆள்மாறி ஆள்விட்டு – அங்கும், எங்கும் விசாரித்தபோது வந்தது வின்சனின் வீரச்சாவுச் செய்தி.

மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோயிலடி சிலுவில் வயல்வெளியில், மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் கிடந்தது வின்சனின் வித்துடல் இந்தியப்பத்திரிகை நிருபர் அனிதா பிரதாப் எழுதிய “இரத்தத்தீவு” (Island of Blood)) எனும் நூலில் குறிப்பிடப்படும் வின்சன் இவராவார்.

அக்காவையும், பிள்ளைகளையும் காணிக்கை அண்ணரின் வீட்டருகில் இருந்த நடராசா ஐயாவின் வீட்டில்–மட்டுவில் மகேஸ் வீட்டில்  சந்தித்துவிட்டு திரும்பும் வேளையில் இந்தியப்படை எதிர்கொண்டது.

தப்பும் முயற்சியும் முடியாமல் போக, சயனைட் அருந்தி தலைவரின் குடும்பத்தையும், தமிழீழத்தின் மானத்தையும் காத்து தன்னுயிர் கொடுத்து நின்றான் வின்சன்.

வின்சன் வீரச்சாவடைந்த சோகமும், தலைவரின் குடும்பத்தைப் பாதுகாத்து விட்டான் என்ற நிம்மதியுமாக,என்றும் அவனது நினைவில் அழியாதவை.

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!