பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது

செவ்வாய் செப்டம்பர் 15, 2020

 கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் சிறந்த செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத் திய நாடுகளில் இலங்கையும் முன்னிலை வகிப்பதால் உலக நாடுகளின் தலைவர்களும் இதற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

நாட்டின் பொருளாதார சவால்களும் இதேபோன்று வெற்றி கொள்ளப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சேவையில் இன்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதி இரா ஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெளிவான முறையான செயற்றிட்டத்தின் கீழ், நாட்டின் பொரு ளாதாரத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் மூலம் மக்களுக்கு மத்தியில் அரசாங்கம் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வங்கித் துறை வலுப்படுத்தப்படுவதோடு, தொழில் முயற்சியாளர் களையும் பாதுகாப்பது அவசியமாகும் என்றும் நிதி இரா ஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.