பொறுப்பற்ற செயலால் ஏற்படும் பேரிழப்புகளை நியாயப்படுத்துகிறோம்- ஜி,வி பிரகாஷ்

செவ்வாய் அக்டோபர் 29, 2019

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் மறைவிற்கு, பொறுப்பற்ற செயலால் ஏற்படும் பேரிழப்புகளை நியாயப்படுத்துகிறோம் என்று ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
 
திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித், சுமார் 80 மணி நேரமாக நடைபெற்று வந்த மீட்பு பணிகளுக்குப் பிறகு குழந்தை உயிரிழந்த‌தாக இன்று அதிகாலை 2.30 மணியளவில் அறிவித்தார்கள்.

சுஜித் இழப்பு பொது மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், ‘ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நமது பொறுப்பற்ற செயலால் ஏற்படும் “பேரிழப்புகளை” நியாயப்படுத்துகிறோம், தப்பித்துக்கொள்கிறோம்.

உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகளை மூட போர்கால அடிப்படையில் அரசும், தனி மனிதர்களும் முயற்சி எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பதிவு செய்திருக்கிறார்.