பொதுச் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் நடத்திய பிக்குமார்!!

புதன் செப்டம்பர் 15, 2021

பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என கூறப்படும் துறவி உட்பட மூன்று துறவிகள் பொது சுகாதார பரிசோதகரைத் தாக்கியமைக்காக கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.
 
சினோபாம் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்வதற்காக கெக்கிராவை பகுதியில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்ற மூன்று துறவிகளால்,குறித்த பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தாக்கப் பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு செயலாளர் என்று கூறப்படும் ஒரு துறவி உட்பட மூன்று துறவிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.இதனியடுத்து சந்தேகத்திற்குரிய துறவிகள் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.