பொதுமக்களின் கருத்தை திசைதிருப்ப முயற்சி!

செவ்வாய் சனவரி 28, 2020

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் மத்திய வங்கி தடயவியல் தணிக்கை அறிக்கை குறித்த பொதுமக்களின் கருத்தை திசைதிருப்ப முயற்சிப்பதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, குற்றம் சாட்டியவர்கள் தவறு செய்தவர்களாக மாற்றப்படுவார்கள் என்றும் எதிர்காலத்தில் சர்ச்சைக்குரிய மோசடியில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், மத்திய வங்கியின் தடயவியல் தணிக்கை அறிக்கையை தவறாக சித்தரிக்க சில குழுக்கள் முயற்சித்ததாகவும் தெரிவித்தார்.மேலும் தவறு செய்தவர்களைத் தண்டிக்க அரசாங்கம் விரும்பவில்லை என கூறிய அவர், நாட்டின் தற்போதைய கடன் 12 ஆயிரம் பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் டில்வின் சில்வா சுட்டிக்காட்டினார்.