பொய்ச் செய்திகளுக்கு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மறுப்பு

புதன் மே 29, 2019

கடந்த ஈழமுரசு முள்ளிவாய்க்கால் சிறப்பிதழ் வெளிவந்ததன் பின்னர், ஈழமுரசு இதழுக்கு எதிராக சமூகவலைத் தளங்கள் ஊடாக திட்டமிட்டரீதியில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதல் குறித்து வாசகர்கள் அறிந்திருப்பார்கள்.

முள்ளிவாய்க்கால் சிறப்பிதழில் வெளியான ஒரு திரைப்பட விளம்பரம் குறித்து இந்தச் சர்ச்சை தோற்றுவிக்கப்பட்டிருந்தது.

சமூக வலைத்தளங்களில் ஓரிருவர் முன்வைத்திருந்த இந்தக் குற்றச்சாட்டுக்களை, ஈழமுரசின் மீது வன்மம் கொண்டிருக்கும் ஓரிரு ஊடகங்கள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஈழமுரசின் மீது சேற்றை வாரியிறைத்து அபாண்டமான பழியைச் சுமத்துவதற்கு முயற்சித்திருந்தன.

குறிப்பாக தமிழினத்திற்கு எதிரான தீவிர கொள்கையைக் கொண்டுள்ள சிறீலங்காவின் இனவாத அமைப்புக்களில் ஒன்றான ஜே.வி.பியின் பெயரில் இயங்கிவரும் தமிழ் ஊடகம் ஒன்று, பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை ஆதாரமாக்கி செய்தி வெளியிட்டிருந்தது எமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அச்செய்தியில், ‘தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துக்காக இப்பத்திரிகை தொடங்கப்பட்டிருந்தாலும், 2009க்கு பின்னராக இது தனியயாருவரின் பத்திரிகையாக இயங்கி வருவதோடு, தமக்கும் இப்பத்திரிகைக்கும் தொடர்பு இல்லை என தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான ஒரு பதிலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வழங்கியதா? அல்லது அவர்கள் பொய்யான தகவலை இதனுVடாக வெளியிட்டுள்ளார்களா? என்பதை நாம் அறிந்துகொள்ள பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, அவ்வாறான ஒரு பதிலை தாங்கள் வழங்கவில்லை என்றும் இது அவர்களின் பொய்யான செய்தியயன்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர்கள் ஈழமுரசுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.