பொய்யா விளக்கு!

வெள்ளி நவம்பர் 15, 2019

தமிழ் இன அழிப்பின் பின்னர் பத்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அந்த யுத்தபூமியில் மக்களோடு மக்களாக நின்று சேவையாற்றிய வைத்தியர்களை நாம் மறந்து விடலாகாது.  

அவர்களில் ஒருவரும் தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவருமான வைத்தியர் வரதராஜா அவர்களின் கதையினை திரைப்படமாக்கியுள்ளார்கள்.   

f

பொய்யா விளக்கு என்ற இந்தத் திரைப்படம் உலகின் பல நகரங்களில் தற்போது பிரத்தியேக காட்சிகள் மூலம் திரையிடப்பட்டு வருகிறது.   வைத்தியர் வரதராஜாவே  இதில் நடித்தும் இருப்பது ஒரு சிறப்பு.  

மிகவும் தரமானதொரு திரைப்படமாக இது வெளிவந்திருக்கிறது. இதனை எழுதி இயக்கியிருப்பவர் ஈழத்தமிழரும், தற்போது கனடாவில் வசிப்பவருமான தனேஸ் கோபால். 

ஈழ சினிமாவின் மிக முக்கியமான படமாக இது பேசப்படும் என எதிர்பார்க்கலாம்.   

இதையிட்டு இயக்குனர் சொல்கையில், “பொய்யா விளக்கு எங்களின் கதைகளை நாங்களே செய்ய வேண்டும் - நாங்கள் தான் செய்ய வேண்டும் என்ற உண்மையினைப் பறை  சாற்றுகிற படமாக இருக்கும். இவ்வாறான முயற்சிகள் இது வரையில் எங்களால் முன்னெடுக்கப்படவில்லை.  பொய்யா விளக்கு இதற்கானவொரு முதற் பாலமாக இருக்கும்” என்கிறார். 

இந்தப் படத்தில் எதுவிதமான அகோரக்காட்சிகளும் இல்லாமல் வலிகளைப் பதிய வைத்திருக்கிறார்கள். இனிமையான இசை, செழுமையான ஒளிப்பதிவு 

என்று ஒரு கவிதையாகப் படம் கையாளப்பட்டிருக்கிறது. வைத்தியரின் இயல்பான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.  இது எம்மவர்களின்  படைப்புகளுக்கு ஒரு மகுடமாக இனிவரும் காலத்திலும் பேசப்படும்.  உங்கள் நகரில் இது திரையிடப்படும் போது காணத் தவறாதீர்கள்.