பொய்யான பிரசாரங்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்கும் சட்டம்!

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

பொய்யான பிரசாரங்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

பலாங்கொடை பாடசாலை ஒன்றில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி பாடசாலை கட்டிடத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் நேற்று (17) கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் ஊடக சுதந்திரத்தை ஏற்படுத்தியதாகவும், எனினும் அதனூடாக பொய்யான பிரசாரங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் இதன் போது குற்றம் சுமத்தினார்.

அதனூடாக, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களே அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளாகுவதாக அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.