பரிஸ் நகரம் 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்துள்ளது!

புதன் மார்ச் 31, 2021

கடந்த 2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பரிஸ், 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இல் து பிரான்சுக்கான பிராந்திய சுற்றுலாத்துறை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே முடக்கிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால், பரிஸூக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

இதனால், விமான போக்குவரத்துக்கள், தங்குமிடங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதற்கமைய பரிஸ் 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.

2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 33.1 மில்லியன் பயணிகள் வரத்து குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.