படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி 11 பேர் பலி!

வெள்ளி செப்டம்பர் 13, 2019

இந்தியாவின் மத்தியபிரதேசம் மாநிலத்தில் இன்று காலை படகு கவிழ்ந்த விபத்தில், நீரில் மூழ்கி 11 பேர் பலியாகினர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் பகுதியில் உள்ள கட்லாபூர் காட் எனும் இடத்தில் இன்று காலை நீரில் படகு ஒன்றில் சிலர் பயணம் செய்தனர். ஆழம் அதிகமானதால் படகு தனது பேலன்சை இழந்தது.
 

இதனால் படகில் பயணம் செய்தவர்கள் நீரில் மூழ்கினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு மீட்பு பணியாளர்களுடன் விரைந்தனர்.

 

தீவிர தேடுதல் பணியில் மீட்பு பணியினர்


இந்த விபத்தில் 11 பேரின் சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தீவிர தேடுதல் பணியில் மீட்பு பணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.