பதற்ற நிலையிலும் வர்த்தக மாபியாக்களின் ஆட்டம்

வியாழன் மார்ச் 26, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று நுகர்வோர் அதிகார சபையினால் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பில் பல வர்த்தக நிலையங்கள் பொருட்களை பதுக்கி வைத்த குற்றத்திற்காகவும், அதிக விலைகளை வைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்த குற்றத்திற்காகவும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் 5 வர்த்தக நிலையங்களும் காத்தான்குடியில் 12 வர்த்தக நிலையங்களும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு எங்களது மேற்பார்வையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது, அத்துடன் குறித்த விற்பனை நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோர் பொருட்கொள்வனவில் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும், முறைப்பாடுகள் ஏதும் தெரிவிக்க வேண்டுமானால் 1977 எனும் இலக்கத்திற்கு அல்லது 0770110096 எனது கையடக்க தொலைபேசிக்கும் அழைப்பினை எடுத்து முறையிட முடியும் என அவர் தெரிவித்தார்.