பட்டப்படிப்பை நிறைவு செய்தார் மலாலா

வெள்ளி ஜூன் 19, 2020

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மலாலா யூசுப் சாய் ;தற்போது தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

 பாகிஸ்;தானைத் சேர்ந்த மலாலா யூசுப்சாய் ;இளம் வயதிலேயே பெண்களின் கல்விக்காகவும், தீவிரவாத ஒடுக்கத்திற்கு எதிராகவும் தொடர்ந்து போராடியவர்.

 பாகிஸ்தானின் ஸ்வெத் வேலியில் பிறந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார்.

 கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் பிரிட் டனில் சிகிச்சை;யளிக்கப்;ட்டு உயிர் தப்பினார் மலாலா. சிறுமிகளின் முன்னேற்;த்துக் ;காகக் குரல் கொடுத்தார் மலாலா.

 இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு அமை;திக்;கான நோபல் பரிசு அவ ருக்குக் கிடைத்தது. உலகி;லேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெறு;பவர் என்ற பெருமைக்;குரியவரானார்.

 எட்க்பாஸ்டோன் உயர் நிலைப்பாடசாலையில்பாடசாலை  படிப்பை முடித்த அவர் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் துறையில் பட்டபடிப்பை படித்து வந்தார்.

 ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் லேடி மார்க்ரெட் ஹாலில் படித்த அவர் தற்போது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். 

 அது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மலாலா தெரிவித்துள்ளதாவது, 

 தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் துறையில் பட்டம் பெற்றுவிட்ட மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. தற்போதைக்கு நெட்ப்ளிக்ஸ், புத்தகங்கள் மற்றும் தூக்கம். இதை தவிர வேறேதும் இல்லை என்று கூறியுள்ளார்.