படுகொலை முயற்சியைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்

வியாழன் பெப்ரவரி 18, 2016

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. பரமலிங்கம் அவர்கள் மீது நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட படுகொலைத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினரை தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

படுகொலை முயற்சி நடைபெற்ற Villeneuve-Saint-Georges நகரின் நகரசபை முன்பாக இந்தப் போராட்டம் பல்வேறு அமைப்புக்களாலும் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

காலம் : 19.02.2016 வெள்ளிக்கிழமை 13.00 மணி முதல் 18 மணி வரை
இடம் : Place Pierre Sémard - 94190 Villeneuve-Saint-Georges நகரசபை முன்பாக.

RER - D தொடருந்தில் Villeneuve-Saint-Georges தரிப்பிடத்தின் முன் வாசலில் நகரசபை அமைந்துள்ளது.