புல்லூமலை படுகொலைகள்!

சனி டிசம்பர் 14, 2019

இலங்கைத் தீவின் கிழக்கு மாகாண  மட்டக்களப்பு மாவட்டத்தின படுவான்கரை பகுதியில், ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமமே புல்லூமலை!

புல்லுமலை, கோப்பாவெளி மற்றும் உறுகாமம் ஆகிய மூன்று கிராமங்களும் பக்கத்து பக்கத்து கிராமங்களாகும்.

மட்டு நகருக்கு வடமேற்காக சுமார் 42 கிலோமீற்றர் தூரத்தில் செங்கலடி - பதுளை (ஏ5) பிரதான வீதியில் அமைந்துள்ள கிராமம்தான் புல்லுமலை!

கிழக்கு மாகாணத்தையும் மலைநாட்டையும் இணைக்கும் செங்கலடி - பதுளை வீதி (ஏ5) அமைக்கப்பட்டமையினால்,

ஆங்கிலேயேரின் ஆட்சிக் காலத்தில் இப்பகுதி மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியுள்ளது. அதுமாத்திரமல்லாமல்> ஆங்கிலேயேரின் காலத்தில் குறிப்பாகஇ தேயிலை வியாபாரமானது நீராவியில் இயங்கும் ஊர்தி மூலமாக இவ்வீதியினுடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கு குடியிருப்பவர்களின் சிறு தொகையினர் மலையகத் தமிழர்கள் ஆவார்கள். ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்களினால் தமிழகத்தில் இருந்து கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்டு மலையகத்தில் குடி ஏற்றப்பட்டு,

தேயிலைச் செய்கைக்கான தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டு இலங்கைத்தீவின் வளர்ச்சிக்கு உழைத்து வாழ்ந்து வந்த இந்த மக்கள்,

தென்பகுதியில் இடம்பெற்ற சிங்கள பேரினவாத சக்திகளின் இனச் சுத்திகரிப்பு செயற்பாடுகள் காரணமாக வெளியேற்றப்பட்ட இந்த தமிழ் மக்கள்> புல்லூமலை மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் குடியேறி.

வயல்நிலங்கள்> நீர்நிலைகள் போன்ற வளமான பகுதியில் பஞ்சமின்றி செழிப்பாக வாழ்ந்து வந்துள்ளனர்.

சிறீலங்கா 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழ் பேசும் மக்களுக்கு கரிநாள் தொடங்கியது.