புலம்பெயர் தொழிலாளர்கள் 21 பேர் பலி

சனி மே 16, 2020

உத்தரபிரதேச மாநிலம் அவ்ரயாவில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ராஜஸ்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மே 17-ந்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3-ம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கு தொடரும் என கடந்த செவ்வாய்கிழமை அன்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஊரடங்கால் வெளிமாநிலங்களில் தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அவர்கள், நடைபயணமாகவோ அல்லது லாரிகள் மூலமாகவோ சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அவ்ரயாவில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ராஜஸ்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தானை சேர்ந்த தொழிலாளர்கள் லாரியில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் போது இச்சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.