புலனாய்வுத் துறைகளின் கண்களில் மண்ணைத்தூவி...ஒரு பொருளாதாரக் குற்றவாளியின் தப்பியோட்டம்!

ஞாயிறு சனவரி 12, 2020

ஜப்பானின் புலனாய்வுத்துறையும், நீதித்துறையும் பெரும் அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் உள்ளாகியுள்ளன. புது வருடம் பிறப்பதற்கான கொண்டாட்டத் தயாரிப்பில் ஜப்பான் மூழ்கியிருக்க, பொருளாதாரக் குற்றவாளியாக, ஜப்பானினால் கைது செய்யப்பட்டிருந்த, நிஸான் (NISSAN) மற்றும் ரொனா(RENAULT) வாகன நிறுவனங்களின் முன்னாள் நிர்வாக இயக்குநர் கார்லோஸ் கோஸ்ன் (Carlos Ghosn) மாயமாக மறைந்திருந்துள்ளார்.

எந்நேரமும் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த, ஜப்பானின் மிக முக்கிய குற்வாளியான கோஸ்ன்,கண்காணிப்பு ஒளிப்பதிவுகளிலோ, நீதித்துறை, காவற்துறை, மற்றும் புலனாய்வாளர்களின் கண்களில் சிக்காது, மாயமாகி உள்ளார். கடந்த இரண்டரை வருடங்களாக, இவர் காவலில் இருந்த வீடு, ஜப்பானின் எல்லைக் காவற்படையினரால், 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையிலேயே, இவர் தப்பிச் சென்றிருப்பது, பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.

பெரும் பொருளாதார மோசடிகளைச் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டில், கோஸ்ன் 2018ஆம் ஆண்டின் நவம்பர் இறுதிப்பகுதியில், கைது செய்யப்பட்டு, ஜப்பானின் சிறையில் 18 மாதங்கள் அடைக்ப்பட்டார். அதன் பின்னர், ஒன்பது மில்லியன் டொலர் பிணையில், ஒரு வாடகை வீட்டில்,  வீட்டுக் காவலில் இருக்க, ஜப்பானின் நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது.

2019 நத்தார் வாரங்களில், கோஸ்னின் விசாரணைகளை 2020 ஜனவரியில் ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்களை, ஜப்பானின் நீதித்துறை கலந்தாலோசிக்க ஆரம்பித்தது. கோஸ்ன் ஜப்பானிற்கு வந்தபோது பிரெஞ்சுக் கடவுச் சீட்டுடனே வந்திருந்தார் என்றும், இந்தக் கடவுச் சீட்டு, ஜப்பானின் நீதித்துறையினரால் கையகப்படுத்தப்பட்டது என்றும் ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வளவு பெரும் ஆயத்தங்களுடன் இயங்கிய ஜப்பான் அரசு, தன் தீவிர கண்காணிப்பின் போதே கோஸ்னைக் கோட்டை விட்டுள்ளது.

புதுவருடக் கொண்டாட்டமானது ஜப்பானில் மிகவும் முக்கியமான விடுமுறைதினமும் கொண்டாட்டமுமாகும். அரச நிறுவனங்கள், மற்றும் பெரும்பாலான நிர்வாகங்கள் அனைத்திற்கும், ஒருவார விடுமுறை விடுவது வழக்கம். தன் மீதான விசாரணைகள் ஆம்பிக்கப்பட்டால் தனக்கான தண்டனை உறுதிப்படுத்தப்படும் என்ற நிலையில் தப்பிச் செல்லும் திட்டத்தை கோஸ்ன் தீட்டியுள்ளார்.

இவர் தங்கியிருந்த நீதிமன்றம் அருகிலுள்ள டோக்கியோ விட்டில், இவரிற்கான அனைத்துத் தொலைத்தொடர்பு
களும் துண்டிக்கப்பட்டே இருந்தது. இவரிற்கான, டோக்கியோவில் இருக்கும் சடடத்தரணி வீட்டிற்குச் செல்வதற்கு மட்டுமே இவரிற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அங்கு மட்டுமே இவர் இணையத்தை உபயோகிக்கும் அனுமதி இருந்துள்ளது.

ஆனால் இவரின் தலைமறைவிற்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், தான் பேரதிர்ச்சியில் உள்ளதாகவும் இவரிற்கான டோக்கியோவிற்கான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். அவரின் மூன்று கடவுச் சீட்டுக்களும் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுத் தன்னிடம் வழங்கப்பட்டதாகவும், அந்த ஆவணங்கள் அனைத்தும் இன்னமும் தன்னடமே உள்ளதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தையும் மீறி, கோஸ்ன், தனக்கான லெபனானில் உள்ள சட்டத்தரணியோடு தொடர்பை உண்டாக்கிப் பெரும் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

கோஸ்ன் ஜப்பானில் இருந்து தலைமறைவாகிய இரண்டு நாட்களிற்குள், தனது தாய் நாடான லெபனானில் தறை
யிறங்கி உள்ளார் எனத் தெரியவந்துள்ளது. 2018 இல் இவர் ஜப்பானில் கைது செய்யப்பட்ட உடனேயே, தங்களது நாட்டின் கதாநாயகனை, ஜப்பான், நீதிக்குப் புறம்பாகக் கைது செய்திருப்பதாகக் கண்டித்திருந்தது.

லெபனானின் மக்களும் இவரை ஒரு பிரமாண்டப் பரிமாணத்துடனே பார்த்து வந்துள்ளனர்.

லெபனான் அரசாங்கம், தங்களிடம் தஞ்சமடைந்த கோஸ்னை வரவேற்று உள்ளது. லெபனானிற்கும் ஜப்பானிற்கும் எந்தவிதமான கைதிப் பரிமாற்ற ஒப்பந்தங்களும் இல்லாமையினால் ஜப்பான் பெரும் சிக்கலிற்கு உள்ளாகியது.

லெபனான் அரசாங்கம், ஜப்பானின் எந்தக் கோரிக்கைக்கும் செவி சாய்க்காது என்பது ஜப்பானிற்குத் தெளிவாகவே புரிந்துள்ளது.

இவர் தப்பிச் சென்ற விதம், பெரும் திகில் திரைப்படங்களைவிட விறுவிறுப்பு மிகுந்ததாகவே உள்ளது. இவர் தப்பிச் சென்ற விதத்தை உலகின் பொதுப் பங்குச்சந்தைப் பத்திரிகையான நிழியியி றீமிreeமி மூலிற்rஐழியி ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.

ஒரு பெரும் இசைக்கருவி வைக்கக்கூடிய, ஒரு பெரும் பெட்டியினுள், சுவாசிப்பதற்கான துளைகள் இடப்பட்டு, அதனுள் ஒளிந்திருந்தே கண்காணிப்பாளர்களின் கண்களில் மண்ணைத்தூவி கோஸ்ன் வெளியேறி உள்ளார். அதன் பின்னர் ஜப்பானின் ஒசாக்கா விமான நிலையத்தில் இருந்து, பிரத்தியேக விமானத்தில் துருக்கி நோக்கிச் சென்றுள்ளார்.

துருக்கியிலிருந்து ஒழுங்கு செய்யப்பட்ட வேறொரு தனியார் விமானத்தின் மூலம் லெபனானின் தலைநகரமான பெய்ரூட்டை வந்தடைந்துள்ளார்.

இதேநேரம், துருக்கி, இரண்டு தனியார் விமான சேவையின் வெளிநாட்டு விமானிகளைக் கைது செய்துள்ளது. ஆனால் இந்த விமானிகள் செலுத்திய விமானம், துருக்கியின் னிஹிறூ நிறுவனத்திற்கு சொந்தமானது.

இந்தக் கைதினைக் கண்டித்துள்ள இந்த நிறுவனம், தங்கள் சேவையிடம் இரண்டு சரக்கு விமானங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், இந்த இரண்டு விமானங்களைப் பதிவு செய்தவர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் தொடர்பில்லாதவர்கள் என்றும், தங்கள் பதிவுகள் எதிலும் கார்லோஸ் கோஸ்னின் பெயர் இல்லையயன்றும் வாதிட்டுள்ளனர்.

கோஸ்ன் தப்பிய விதத்தை ஜப்பான அரசு ஏற்க மறுத்தாலும், அவர்களிடம் வேறு எந்தவிதமான விளக்கங்களும் இல்லை. இவரின் மூன்று கடவுச் சீட்டுக்களும் தங்களிடமே உள்ளதாகத் தெரிவித்துள்ள ஜப்பானிடம், அந்தக் கடவுச்சீட்டுகளிற்குரிய நபர் இல்லை என்பதுதான் விநோதம்.

ஜப்பான் அரசு தங்களிடம் உள்ள ஆதாரங்களை வைத்து இந்த முடிச்சுகளை அவிழ்க்க பகீரதப் பிரயத்தனம்  செய்கின்றது. இதில் வேறு அரசாங்கங்களின் உதவியும் கிடைத்திருக்கும் என்றும், பெரும் நிறுவனங்களின் உதவியுடன் மட்டுமே தான் இது நடந்திருக்கும் என்றும், கோஸ்ன் இற்கு வழங்கிய பிணையைத் தாம் உடனடியாக இரத்துச் செய்வதாகவும், முன்னாள் அமைச்சரும், கோஸ்னின் வழக்கினைக் கையாண்டவருமான மசகிஸா சாட்டோ குற்றம் சாட்டி உள்ளார். இவர் தப்பிய விதத்தினை ஆராய அமெரிக்க நிறுவனம் ஒன்றின் உதவியையும் ஜப்பான் நாடி உள்ளது.

இதேநேரம் லெபனான் அரசு, கோஸ்ன் பிரெஞ்சுக் கடவுச்சீட்டுடனே தங்களிடம் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளமை, டோக்கியோவை மேலும் கோபப்படுத்தியுள்ளது. லெபனான் தூதரகத்திடமும், பிரெஞ்சுத் தூதரகத்திடமும் இதற்கான விளக்கத்தினை டோக்கியோ கோரியிருந்தாலும், இரண்டு தூதரகங்களும் எந்தவித
மான விளக்கங்களையும் வழங்கத் தயாராக இல்லை.

இது ஒரு பொருளாதாரக் குற்றவாளியைத் தப்பவைக்கும் சில நாடுகளின் இராஜதந்திர நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என டோக்கியோ விமர்சித்துள்ளது.

எந்த விதமான இணைய வசதிகளோ, அல்லது தொலைத்தொடர்புகளோ அற்ற நிலையில் கோஸ்ன் தப்பியிருப்பது பெரும் சாகசமாகவே உள்ளது.

111

தப்பிச் செல்வதற்கு ஒரு வாரம் முதல், அதாவது டிசம்பர் 24ம் திகதி, தனது மனைவியுடன் கோஸ்ன் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகக் கதைத்துள்ளார். கோஸ்ன் தனது துணைவியாருடன் தொடர்பு கொள்வதைத் தடைசெய்யுமாறு, மசகிஸா சாட்டோ, நீதிமன்றத்தைக் கோரியிருந்தார். இந்தத் தொடர்பாடல், கார்லோஸ் கோஸ்ன் தப்பிச்செல்வதற்கான சதியை உருவாக்கிவிடும் அபாயத்தை ஏறப்படுத்திவிடும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் நீதிமன்றம் இவர்களிற்கிடையிலான தொடர்பாடலை அனுமதித்திருந்தது.

ஆனாலும் 2018 இல் கைது செய்யப்பட்டபோது ஒரு தடவையும், தப்பிப்பதற்கு ஒரு வாரம் முதலும் மட்டுமே இவர்கள் இருவரும் தொடர்பை ஏற்படுத்தி உள்ளனர்.

கோஸ்ன் இனைக் கண்காணித்தவர்கள், அடிக்கடி அவரின் மகள் டோக்கியோவிற்கு வந்து போவதையும், தந்தையுடன் தொடர்பிலிருப்பதையும் அவதானித்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்தத் தப்பியோட்டமானது நெடுநாளையத் திட்டமிடலுடன் இம்மி பிசகாமல் அரங்கேற்றப்பட்டுள்ளது.

ஜப்பானின் நீதியானது, ஒரு பணயக்கைதித் தத்துவத்துடன் கூடியது என்றும், மனித உரிமைகளைப் பெருமளவில் மீறியதென்றும், தன் தரப்பு வாதத்தை வழங்கும் சந்தர்ப்பத்தினைக்கூட குற்றம் சாட்டப்பட்வரிற்கு வழங்காத அராஜக நீதியயன்றும், லெபனானில் உள்ள கோஸ்ன் இன் வழக்கறிஞர் குழாம் விமர்சித்துள்ளது.

இதே விமர்சனத்தையும், கண்டனத்தையுமே, சர்வதேச மன்னிப்புச் சபையும், ஜப்பானிய நீதித்துறை மீதும், சிறைத்துறை மீதும் வைத்துள்ளது. அடிப்படை மனித உரிமைகள் எதுவும் வழங்கப்படாத நீதி என்றும், தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

லெபனானில் தலைநகரில் மீண்டும் பணப்பலத்துடன் உள்ள கார்லோஸ் கோஸ்ன் இனைக் கைது செய்து தருமாறு, ஜப்பானின் நீதித்துறை இன்டர்போலிடம் சிவப்பறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இவரிற்குத் தாங்கள் வழங்கிய பிணையை இரத்துச் செய்வதுடன், சட்டவிரோத சக்திகளின் கூட்டுச் சதியின் மூலம் தப்பிச் சென்ற பொருளாதாரக் கைதி கார்லோஸ கோஸ்ன் என்றும் இன்டபோலிடம் வழங்கிய, தங்களது சிவப்பறிக்கையில் ஜப்பான் தெரிவித்துள்ளது.

111

இதே நேரம், பிரான்சின் பொருளாதாரம் மற்றும் நிதியமைச்சின் துணை அமைச்சர் Agnès Pannier-Runache கோஸ்ன் தப்பிச் சென்றமையைத் தான் செய்திகளில் மட்டுமே அறிந்ததாகவும், என்ன நடந்திருக்கும் என்பதைத் தான் ஊகித்ததாகவும் தெரிவத்துள்ளார்.

அத்துடன் ஒரு பிரெஞ்சுப் பிரஜை நீதியில் இருந்து தப்ப முயல்வதைத் தான கண்டிப்பதாகவும், ஆனால் ஒரு பிரெஞ்சுப் பிரஜையாக, பிரெஞ்சுத் தூதரகத்தின் அனைத்து உதவிகளையும் பெறும் உரிமை கோஸ்னிற்கு உள்ளதென்றும் தெரிவித்துள்ளமை, பெரும் சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

ஜப்பானின் முக்கிய ஒசாக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, துருக்கியினூடக பெய்ரூட்டை அடைவது என்பது, ஒரு முக்கிய நாட்டின் புலனாய்வுத் துறையின் துணையின்றிச் சாத்தியமாகாது என்பது ஆய்வாளர்கள் கருத்து.

ஜப்பான் குற்றம் சாட்டுவது போலவே, பிரான்சின் கரம் ஜப்பானில் இருந்து, லெபனான் வரை நீண்டிருக்குமா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. சிலவேளை இது நிரந்தரக் கேள்விக்குறியாகவே இருந்து விடக்கூடிய சாத்தியமும் உள்ளது.

-சோழகரிகாலன்-

நன்றி: ஈழமுரசு

111