பூநகரியில் கோரவிபத்து

ஞாயிறு ஜூலை 05, 2020

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

டிப்பர் வாகனமும் உந்துருளி ஒன்றும் மோதியதிலேயே மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாெரட்டுவ பல்கலைக்கழக மாணவனான மோகன் ஆகாஸ் (23-வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.