புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த இ.போ.சபை பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா!!

ஞாயிறு அக்டோபர் 18, 2020

அண்மையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த இ.போ.சபை பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (18) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டுமுறை மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையின் அடிப்படையிலேயே அவருடைய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்–வடமராட்சி, துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த இவர் உட்பட பேருந்தில் பயணித்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு முறை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.அவர்களில் நடத்துநர் தவிர்ந்த ஏனையவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரியவருகிறது.