புற்றுநோய் திரும்ப வருவதற்கான காரணம் என்ன?

சனி ஜூன் 01, 2019

இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தவறான அல்லது குறைவான சிகிச்சை. இன்னொன்று சம்பந்தப்பட்ட புற்றுநோயின் தன்மை.

தற்போது உடல் பருமனுக்காக செய்யப்படும் 'பேரியாட்ரிக் சர்ஜரி' எனப்படும் அறுவை சிகிச்சை முறை கடந்த சில ஆண்டுகளாகத்தான் நடைமுறையில் உள்ளது. அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் இந்நாள் வரை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

விழித்திரையில் ஒரு மச்சம்  அது புற்றுநோயாக இருக்குமா? விழித்திரையில் ஏற்படும் மச்சங்கள் எல்லாம் புற்றுநோய்கள் அல்ல. புற்றுநோயாக மாறினால் பார்வை குறைபாடு ஏற்பட ஆரம்பிக்கும்.

ரசாயன உரங்கள் மூலம் விளைவிக்கப்படும் நெல், காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் இரைப்பை மற்றும் கல்லீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே, முடிந்தவரை இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது.