புதிதாக 4.7 இன்ச் ஐபோன் வெளியிடும் அப்பிள்

வியாழன் ஏப்ரல் 18, 2019

அப்பிள் நிறுவனம் 4.7 இன்ச் அளவில் புதிய ஐபோன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்பிள் நிறுவனம் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 2017 இல் அறிமுகம் செய்தது. சமீபத்தில் ஐபோன் 7 உற்பத்தி இந்தியாவின் பெங்களூருவில் அமைந்திருக்கும் விஸ்ட்ரன் ஆலையில் துவங்கியது. விரைவில் ஐபோன் X மாடல் சென்னையில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஆப்பிள் ஐபோன் 8 மாடலின் புதிய வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தாய்வானில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் 8 மாடலில் 4.7 இன்ச் LCD டிஸ்ப்ளே, ஏ13 சிப்செட், PCB வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

புகைப்படம் எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா, 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது. தற்சமயம் ஐபோன் 8 (64 ஜி.பி.) விலை இந்தியாவில் ரூ.41,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் புதிய ஐபோனின் விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.