புதிய அரசாங்கத்திற்கு மனித உரிமைகள் விடயத்தில் அழுத்தங்களை கொடுப்போம்!

புதன் அக்டோபர் 23, 2019

சிறிலங்காவின்  புதிய அரசாங்கத்திற்கு மனித உரிமைகள் விடயத்தில் அழுத்தங்களை கொடுக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தென்னாசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் அலைஸ் வெல்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு சீர்திருத்தம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துதல் கடந்த கால குற்றங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்காக நம்பகதன்மை மிக்க பொறிமுறையை ஏற்படுத்துதல் ஆகிய விடயங்களில் முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது அல்லது குறைவடைந்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் புதிய இராணுவதளபதிபதியாக சவேந்திரசில்வாவை நியமித்துள்ளமை குறித்த தனது  ஏமாற்றத்தை அமெரிக்கா பகிரங்கமாக வெளிப்படு;த்தியுள்ளது என தெரிவித்துள்ள அலைஸ் வெல்ஸ் அவர் மீதான மனித உரிமை மற்றும் யுத்த குற்றச்சாட்டுகளே காரணம் என தெரிவித்துள்ளார்.