புதிய கல்வி கொள்கை! மாணவர்கள் போராட தயாராக வேண்டும்-

செவ்வாய் ஜூன் 28, 2022

திருச்சி- தமிழ்நாட்டில் தற்போது உள்ள கல்வி முறையால் தான் உயர் கல்வி படிப்போர் விகிதம் 23 விழுக்காட்டிலிருந்து 57 விழுக்காடாக உயர்ந்ததாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி;

மாணாக்கரின் போராட்டங்களால்தான் இன்றைய கல்வித்திட்டம் வளர்ந்துள்ளது. புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது மாணவர்களின் கடமை என்று தெரிவித்தார் 

மேலும் மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருந்து போராடத் தயாராக இருக்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.