புதிய கொரோனா தொற்றாளர்கள் 11 பேர் அடையாளம்

வியாழன் செப்டம்பர் 24, 2020

இலங்கையில்  நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 11 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய 7 பேர், அமெரிக்காவிலிருந்து நாடுதிரும்பிய இருவர், எத்தியோப் பியாவிலிருந்து திரும்பிய ஒருவர், ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவர் ஆகியோரே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 324 ஆக அதிகரித் துள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண மா கக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 129 ஆக அதிகரித்துள்ளது.

182 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர் ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாவில் உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.