புதிய பாதையில் போராட்டத்தை முன்னெடுப்போம்

சனி ஜூலை 31, 2021

எதிர்வரும் திங்கட் கிழமை அமைச்சரவை குழுவிற்கு சமர்பிக்கப்படவுள்ள அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக தங்களுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் புதிய பாதையில் தங்களது போராட்டத்தை முன்னெடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சினை தொடர்பில் ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை ஆரம்பித்து இன்றுடன் 20 நாட்கள் ஆகின்றன.