புதிய வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 23 ஆம் திகதி பொது மக்கள் பார்வைக்கு!

செவ்வாய் ஓகஸ்ட் 13, 2019

தேர்தலில் வாக்களிப்பதற்கு 2019 ஆம் ஆண்டில் தகுதி பெற்ற புதிய வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் பொது மக்கள் பார்வைக்கு விடப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தப் பட்டியல், சகல கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும், பிரதேச செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமது பெயர்கள் இவ்வாக்காளர் பெயர்ப் பட்டியல்களில் இடம்பெற்றிருக்காவிட்டால் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.வாக்காளர் பட்டியலில் தத்தமது பெயர்கள் இடம்பெற்றிருந்தால் மாத்திரமே தேர்தலில் வாக்களிக்க முடியும். இதனால், தமது பெயர் சேர்க்கப்பட்டிருப்பதை சகல வாக்காளர்களும் உறுதி செய்வது அவசியம் என ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.