புதிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

புதன் மே 22, 2019

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புதிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

வீதி அதிகார சபையினால் தற்போது 34 பாரிய அளவிலான வீதி அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர தெரிவித்தார். 

நாட்டின் அசாதாரண நிலை காரணமாக இடை நடுவில் கைவிடப்பட்டிருந்த இந்த வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

வீதி அபிவிருத்தி வேலைத்திட்டப் பணிகளின் ஈடுபட்டிருந்த பல வெளிநாட்டவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் தமது சொந்த நாடுகளுக்கு திரும்பியிருந்தார்கள். 

எனினும் அவர்கள் தற்சமயம் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.