பூட்டிய அறைக்குள் சந்திப்பை நடத்துபவர்கள் மக்கள் பிரதி நிதிகள் அல்லர்!

திங்கள் ஓகஸ்ட் 03, 2020

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உலகுக்கு கொண்டு செல்லக்கூடியவர்களே மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படவேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அரசறிவியலாளர் (International Relations Scholar) கலாநிதி ரஞ்சித் சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார்.

 

இலண்டன் சிற்றி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான ரஞ்சித் சிறிஸ்கந்தராஜா குவிரன் ஊடக இல்லத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தார்.

 

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் (2020 ) தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற பிரதிநிதி கொண்டிருக்க வேண்டிய தகமை மற்றும் அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளித்த அவர், துரதிஸ்ட வசமாக இப்பணியை தமிழ் மக்களால் ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

 

எனினும் தமிழ்த் தேசியச் சிந்தனையில் தொடர்ந்தும் மக்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக் கூடிய தேசிய சிந்தனையுடன் செயற்படும் பிரிதி நிதிகளை மக்கள் இத்தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும் என்றும் கலாநிதி ரஞ்சித் சிறிஸ்கந்தராஜா குறிப்பிட்டார்.

 

நன்றி: குவிரன் ஊடக இல்லம் (கனடா)

Kuviran News Interview