புத்தளம் மன்னார் வீதி போக்குவரத்துக்கு முற்றாகத் தடை!

திங்கள் அக்டோபர் 14, 2019

கலா ஓயா நீர்த்தேக்கம் பெருக்கெடுத்தமையால் பலைய எலுவாங்குளத்தினூடாக செல்லும் புத்தளம் மன்னார் வீதி போக்குவரத்துக்கு  முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

கலா ஓயா நீர்த்தேக்கம் பெருக்கெடுத்து பழைய எலுவாஙகுளம் சப்பாத்துப் பாலத்திற்கு மேலாக 2அடி உரத்திற்கு வெள்ள நீர் பாய்ந்து செல்கிறது.

இதன் காரணமாக புத்தளம் மன்னார் வீதி முற்றாகத் தடைப் பட்டுள்ளது. இந்நிலையில்  மாற்று வழிகளை பயன்படுத்துமாறு புத்தளம் மாவட்டஇடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.