புதுக்குடியிருப்பு பிரதேச சபை கூட்மைப்பின் ஆட்சியா?

சனி மார்ச் 16, 2019

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உள்ள பிரதேச சபை உறுப்பினர்களில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் 11 பேரை தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் மக்களின் அபிவிருத்திப்பணியில் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் இந்த ஆண்டுக்கான மார்ச் மாத அமர்வு 14.03.19 அன்று பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது தமிழ்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 11 பேரும் ஏனை கட்சிகளின் உறுப்பினர்கள் 11 பேரும் பிரசன்னமாகியுள்ள நிலையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் செயற்பாடு தொடர்பில் ஏனை 11 கட்சி உறுப்பினர்களும் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் வீதி அபிவிருத்தி மற்றும் மின்விழக்கு பொருத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு ஏனை கட்சி உறுப்பினர்கள் எவருக்கும் அறிவிக்கப்படாது.

அவர்களின் வட்டாரத்திற்கு செல்லும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாங்களே இந்த அபிவிருத்தி வேலைகளை செய்வதாக மக்களுக்கு சொல்லி வட்டாரத்தினை சேர்ந்த ஏனை கட்சி உறுப்பினர்களை அழைக்காமல் அவர்களின் முன்மொழிவுகளை புறந்தள்ளி செயற்படுவதாக ஏனைய கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

இது தொடர்பில் சபை கதைக்க முயற்சிக்கும் போது சபையில் வைத்து தவிசாளர்ரின் சொல்லிற்கு கட்டுப்பட்டு அமர்ந்து சபை நேரத்தினை இழுத்தடிப்பு செய்து சபையினை நிறைவு செய்கின்றார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களின் ஆட்சியா அங்கு நடைபெறுகின்றது என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்கள்.

கடந்த 14.03.19 அன்றைய அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.

சிறீலங்கா சுதந்திர கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சுதர்சன் மற்றும் ஜக்கியதேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் முகுந்தகஜன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் மாற்றத்திற்காக இளைஞர்அணி,சிறீலங்கா சுதந்திரகட்சி,ஜக்கியதேசியகட்சி தமிழ்தேசிய மக்கள் முன்னணி,தமிழர்விடுதலை கூட்டணி,ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 11 பேர் இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.