பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்தது! கலக்கமடைந்த வாட்ஸ்அப் நிறுவனம்-

செவ்வாய் சனவரி 12, 2021

வாட்ஸ் அப்பின் புதிய கொள்கை, தனிமனித தகவல்கள் பகிரப்படும் என்ற செய்தி வந்ததையடுத்து அதன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது கணிசமாக குறைந்துள்ளது. இதனையடுத்து வாட்ஸ்அப் நிறுவனம் பயன்பாட்டாளர்களுக்கு விளக்கமளித்துள்ளது.

-வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பகிரப்பட மாட்டாது.

-நண்பர்கள் குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது.

-வாட்ஸ்அப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும். 

-பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம். 

-பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, பதிவிறக்கம் செய்து கொள்ளவோ முடியும்.

வாட்ஸ்அப் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருவதால் விளக்கமளிக்கிறோம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.