ரசாயன கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

திங்கள் செப்டம்பர் 21, 2020

பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார் இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் குரோமிய கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற குரோமிய கழிவுகள் விளைநிலங்களை பாதித்து மக்களின் உயிரை பறிக்கும் எமனாக மாறியிருக்கிறது என்றும் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுகளில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.