ரிசாத்தின் ஆதரவு எங்களுக்கு அவசியமில்லை

சனி அக்டோபர் 17, 2020

 20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீனின் ஆதரவு அரசாங்கத்துக்கு தேவையில்லை என தெரிவித்துளள அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே அரசாங்கம் அவரின் ஆதரவை பெற முயற்சிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ர்pசாத் பதியுதீனின் ஆதரவு இல்லாமலே 20வது திருத்தத்தினை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்குள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ர்pசாத் பதியுதீன் கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்கு பதில் நீதிமன்றத்தில் சரணடைந்து தான் குற்றமற்றவர் என்பதை நிருபிக்கவேண்டும் என மகிந்தானந்த அளுத்கமகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களை முன்னைய அரசாங்கம் இலக்குவைத்தபோது அவர்கள் ஓடிஒளியமால் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்தார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ரிசாத் பதியுதீன் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சராக பணிபுரிந்தவேளை செய்த பல குற்றங்களுக்காக ரிசாத்பதியுதீனிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.