ரீட்வீட் செய்தோருக்கு 65 கோடி பரிசளிக்கும் ஜப்பானியர்!

ஞாயிறு சனவரி 12, 2020

ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்த 1000 பேருக்கு இந்திய மதிப்பில் ரூ. 65 கோடியை பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் யுசகு மேசவா என்பவர், சோசோ என்ற பிரபல ஆன்லைன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோடீஸ்வரரான இவர், எதையும் வித்தியாசமாக செய்யக்கூடியவர். மேலும், ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மூலம் நிலவுக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளார். பணம் மக்களை எப்படி மகிழ்ச்சிப்படுத்துகிறது என்பதை அறியும் முயற்சியாக, தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனவரி 5-ம் தேதி வெளியிட்ட ட்விட்டர் பதிவை தன்னை பின்தொடர்பவர்கள் ரீட்வீட் செய்தால், அதில் இருந்து ஆயிரம் பேரை தேர்ந்தெடுத்து பரிசளிக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த ஆயிரம் பேருக்கு இந்திய மதிப்பில் ரூ.65.3 கோடி பரிசளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுவரை 41.41 லட்சம் பேர் அவரது பதிவை ரீட்வீட் செய்துள்ளனர். மேலும், அவரது பதிவு 14.04 லட்சம் லைக்கு களையும் பெற்றுள்ளது.