ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு

வியாழன் மே 16, 2019

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று (16ஆம் திகதி) சபாநாயகரிடம் கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையழுத்திட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்